தாராபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


தாராபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2017 3:30 AM IST (Updated: 15 July 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம்,

தாராபுரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளைத் தலைவர் ஆண்ட்ரூஸ் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பால்ராஜ், நிர்வாகிகள் மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 7–வது ஊதியக் குழுவை உடனே அமல்படுத்த வேண்டும். 10 முதல் 30 ஆண்டுகள் வரை பணி முடித்தவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Next Story