தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி


தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 July 2017 4:30 AM IST (Updated: 15 July 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

தரகம்பட்டி அருகே மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தரகம்பட்டி,

தரகம்பட்டியை அடுத்த சோனம்பட்டியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பகவதியம்மன், முத்தாலம்மன் ஆகிய சாமிகள் தனித்தனியே சன்னதி கொண்டுள்ளன. இக்கோவில் திருவிழாவையொட்டி மாரியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன ஆகிய சாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து கரகம்பாலித்தல் நிகழ்ச்சி நடைபெற்றதையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி 12-க்கும் மேற்பட்ட மந்தை மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று, சிறு தொலைவு மாடுகளை அழைத்து சென்று அங்கிருந்து மாடுகள் விடப்பட்டன.

இதில் வாளியாம்பட்டி, பொம்மனத்துப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த மாடுகள் முதலாவதாக வந்தன. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story