சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கும்மிடிப்பூண்டி,
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செஞ்சுகான் தலைமை தாங்கினார். ஒன்றியச்செயலாளர் பேபி, பொருளாளர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது 8–வது ஊதிய குழுவில் வரையறுக்கப்பட்ட ஊதியத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும், 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மையத்திற்கு சமையல் எரிவாயுவை அரசே வழங்க வேண்டும், சமையலர் உதவியாளர்களை முதல்–அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைத்திட வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அமைப்பாளர்கள் கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story