கே.வி.குப்பத்தில் சத்துணவு ஊழியர்கள்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று பல்வேறு இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று பல்வேறு இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்த ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய தேக்க நிலை ஊதியத்தை நிலுவையுடன் வழங்க வேண்டும். 8–வது ஊதிய குழுவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதன்படி கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் பி.சந்திரசேகரன் வரவேற்றார்.
இதில் மாவட்ட செயலாளர் மணி, துணை தலைவர் உயிர்நாதன், இணை செயலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story