‘விரும்பிய மாதிரி’ குழந்தை!


‘விரும்பிய மாதிரி’ குழந்தை!
x
தினத்தந்தி 15 July 2017 3:29 PM IST (Updated: 15 July 2017 3:29 PM IST)
t-max-icont-min-icon

தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்துக்கொள்ளும் நிலை ஏற்படும் என்று அமெரிக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.

டுத்த 30 ஆண்டுகளில், குழந்தைகளுக்காக குடும்பம் நடத்தும் முறை ஒழிந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி குழந்தையை ஆய்வகங்களில் வடிவமைத்துக்கொள்ளும் நிலை ஏற்படும் என்று அமெரிக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் உயிர் அறிவியல் துறையின் இயக்குனராக ஹாங்க் கிரேலி இருக்கிறார்.

இவர் கடந்த பல ஆண்டுகளாக, குழந்தையை உருவாக்கும் முறை மற்றும் உயிரின் உருவாக்கம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தனது பல்கலைக்கழக வளாகத்தில் நிருபர்களைச் சந்தித்த அவர், “தம்பதிகள் தங்கள் மரபணுவை (டி.என்.ஏ.) வைத்து ஆய்வகங்களில் கருவை வடிவமைக்கும் முறை இன்னும் 30 ஆண்டுகளில் மிகவும் பிரபலமாகி விடும்” என்றார்.

பெண்ணின் தோல் செல்களை எடுத்து ஸ்டெம் செல்கள் உருவாக்கப் பயன்படுத்தலாம் என்றும், அதன்மூலமாக இறுதியில் கரு முட்டைகளை உருவாக்கலாம் எனவும், பின் அந்த முட்டைகள் மூலமாக ஆணின் ஸ்டெம் செல்களை சேர்த்து குழந்தையை உருவாக்கலாம் என்றும் கிரேலி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையை தாங்களே வடிவமைத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை தற்போதே சாத்தியம்தான் என்றாலும், இன்னும் 30 ஆண்டுகளில் இந்த முறையை மிகவும் குறைந்த விலையில், உயர்ந்த தொழில்நுட்பத்தில் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

30 ஆண்டுகளுக்குப் பின், குழந்தைக்காக தாம்பத்திய உறவு கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமில்லை என்றும் விஞ்ஞானி ஹாங்க் கிரேலி தெரிவித்திருக்கிறார். 

Next Story