இரண்டு வாரத்தில் 1,924 டாக்டர்கள் நியமனம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
அரசு மருத்துவமனைகளில் பற்றாக்குறையை போக்க இரண்டு வாரத்தில் 1,924 டாக்டர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, பண்ணைக்காடு போன்ற பகுதிகளில் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டுவர சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திண்டுக்கல் தலைமை மருத்துவமனைக்கு வந்தார். அங்கு டெங்கு விழிப்புணர்வு பேரணியை அவர் தொடங்கிவைத்தார். பிறகு, டெங்கு காய்ச்சல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண் மற்றும் சிறுவனிடம், டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். அதன்பிறகு, பழனிக்கு சென்ற அவர் அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு செய்தார். மேலும், பழனியாண்டவர் கல்லூரியில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக டெங்கு போன்ற காய்ச்சல்கள் வருவது இயல்புதான். தற்போது, பழனி பகுதியில் காய்ச்சலின் பாதிப்பு சற்று அதிகமாக இருக்கிறது. அதை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சில இறப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. கவனக்குறைவு காரணமாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெறாமல் இருந்தது, காய்ச்சலுடன் பிற நோய்களின் பாதிப்பும் இருந்தது போன்றவைதான் இதற்கு காரணம். மற்றபடி, அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரே பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்படும். வளர்ந்த நாடுகளுக்கு இணையான சிகிச்சையை அளிப்பதற்கு ஏதுவாக 11 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1,634 கோடியை ஒதுக்கீடு செய்து இருக்கிறோம்.
அந்த நிதியில் இருந்து திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு ரூ.11 கோடியே 68 லட்சத்தில் நவீன உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவிகள் விரைவில் நிறுவப்பட இருக்கிறது. ரூ.20 கோடியில் மகப்பேறு ஒப்புயிர் மையம் தொடங்கப்பட உள்ளது. திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பழனியில் சித்த மருத்துவ கல்லூரி ஆகியவற்றை விரைவாக அமைக்க முதல்-அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழகத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் 2 வாரத்தில் 1,224 டாக்டர்கள், 700 சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, அரசு மருத்துவமனை டாக்டர்கள் சிலர் தாங்கள் நடத்திவரும் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை சிகிச்சைக்கு வருமாறு வலுக்கட்டாயமாக அழைக்கிறார்களே...? என அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘முதன் முதலாக இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறீர்கள். இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்’ என்றார். அவரிடம், அரசியல் தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
இந்த ஆய்வின்போது, பொது சுகாதாரம் மற்றும் மருந்து துறை இயக்குனர் குழந்தைசாமி, திண்டுக்கல் கலெக்டர் டி.ஜி.வினய், நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தங்கத்துரை, முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story