பெண் மர்ம சாவு: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் கைது
செம்பனார்கோவில் அருகே பெண் மர்மமான முறையில் இறந்த வழக்கில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செம்பனார்கோவில்,
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஆறுபாதி கிராமத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 30). இவர் சென்னையில் லாரி டிரைவராக உள்ளார். இவருடைய மனைவி திவ்யா (22). இவர்களுக்கு 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஆறுபாதி கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வந்த திவ்யா சம்பவத்தன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து திவ்யாவின் தாய் ரேவதி தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் திவ்யாவுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் சந்திரன் மேல் விசாரணை நடத்தி வந்தார்.
உதவி கலெக்டர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், திவ்யாவிடம் வரதட்சணை கேட்டு கணவர் மதிவாணன், மாமனார் கணேசன், மாமியார் சாந்தி ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை கொடுமைப்படுத்தியது தெரியவந்தது. அதன்பேரில் செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். திவ்யா கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததுடன் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தார்.

Related Tags :
Next Story