தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்லும் முழுத்தகுதி வைகோ பேச்சு
தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச்செல்லும் முழுத்தகுதி ம.தி.மு.க.வுக்கே உள்ளது என்று செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ பேசினார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நேற்று மாலை சாமளாபுரம் அருகே காரணம்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்ட பத்தில் நடந்தது. கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் தலைமை தாங்கினார். பல்லடம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
87 மாதமாக போராடி அவைத்தலைவர் துரைசாமி, ம.தி.மு.க. தொழிற்சங்க கட்டி டங்களை மீட்டுக் கொடுத்துள்ளார். அதுபோல் அரசியல் அரங்கிலும் நாம் போராடி வெற்றி பெறும் நிலை நிச்சயம் வரும். லட்சியம், கொள்கைகளுக்காக போராடும் இயக்கமாக ம.தி.மு.க. உள்ளது. தமிழ கத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நெய்வேலி நிலக்கரி பிரச்சினைகளுக்காக போராடிய இயக்கம் ம.தி.மு.க. தான். மது வேண்டாம். மதுக் கடைகளை மூட வேண்டும் என்று ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடை பயணம் மேற்கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நதிகள் இணைப்பு திட்டத்தை முன்னெடுத்து விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டோம். சாமளா புரத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்க வந்துள்ளேன்.
ம.தி.மு.க.வை விட தொண் டர்களை அதிகம் கொண்ட அ.தி.மு.க., தி.மு.க. அண்ணா நூற்றாண்டு விழாவை கொண்டாட வில்லை. அண்ணா வழியில் நடக்கும் ம.தி.மு.க.வுக்கு மட்டுமே விழாவை நடத்த முழு தகுதியும் உண்டு. தற்போதைய நிலையில் தமிழக அரசின் உரிமைகள் நசுக்கப் பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் தனி அதிகாரம் வழங்க வேண்டும் என்று கட்சி பொதுக்குழுவில் நாம் தீர்மானம் போட்டோம்.
தமிழகத்தின் தற்போதைய அரசு தடுமாறிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு எடுத்துச்செல்லும் முழுத்தகுதி ம.தி.மு.க.வுக்கு உள்ளது. தஞ்சாவூரில் நடக்கும் மாநாடு அதற்கு வித்திடும்.
இவ்வாறு வைகோ பேசினார்.
இந்த கூட்டத்தில் அவைத் தலைவர் துரைசாமி, பொருளாளர் கணேசமூர்த்தி, திருப்பூர் மாநகர செயலாளர் சிவபாலன், மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் எம்.பி. கிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் பல்லடம் நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
முன்னதாக கமல்ஹாசனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து வைகோவிடம் நிருபர்கள் கேட்டபோது, கமல்ஹாசன் சர்ச்சைக்குரியவர். அவர் நடத்தும் டி.வி.நிகழ்ச்சியும் சர்ச்சைக்குரியதாகியுள்ளது. சர்ச்சைக்குரியவர் பற்றி நான் கருத்து எதுவும் கூற விரும்ப வில்லை என்று வைகோ கூறினார்.

Related Tags :
Next Story