காமராஜர் பிறந்தநாள் விழா
மேலூரில் காமராஜரின் பிறந்தநாள் விழாவையொட்டி, அவரின் உருவ படத்திற்கு நகர் காங்கிரஸ் கட்சி தலைவர் நவாப்ஜான் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
மேலூர்,
தொடர்ந்து கக்கன் சிலைக்கும் மரியாதை செலுத்தினர். இதில் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்டத்தலைவர் செல்வராஜ்பாண்டியன், கொட்டாம்பட்டி முன்னாள் தலைவர் திலகராஜ், விவசாயி பிரிவு மாநில தலைவர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது முழு உருவ சிலைக்கு மாணிக்கம் எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதில் காளிதாஸ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், முன்னாள் துணை தலைவர் ராஜேஸ்கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட எஸ்.சி பிரிவு சார்பில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். நகர தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாரியப்பன், சங்கரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் காமராஜரின் உருவபடத்திற்கு மரியாதை செய்யப்பட்டது. இதில் தலைமையாசியர் திருப்பதி, உதவி தலைமையாசிரியர் சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். சோழவந்தான் சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ராபின்சன் செல்வக்குமார் தலைமையில் விழா நடைபெற்றது. சி.புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை ஜெயந்தி தலைமையில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
அவனியாபுரம் பஸ்நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் நல்லதம்பி, கந்தன், குமரையா கஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் சேது, பாலமுருகன், சிட்டிபாபு தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. அவனியாபுரம் நாடார் உறவின் முறை, நாம் தமிழர் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பெருங்குடி பரம்புபட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள மனவளர்ச்சி குழந்தைகளுக்கு காங்கிரஸ் நிர்வாகி கஜேந்திரன் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் கோவிந்தராஜ், பள்ளி தாளாளர் உலகசான்றோன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அவனியாபுரம் அயன்பாப்பாகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் அருணகிரிசாமி கோவில் டிரஸ்ட் சார்பில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் கவுன்சிலர் ஜோதிராமலிங்கம், மார்க்கநாதன், பரங்கிரி, மாணிக்கசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாடிப்பட்டி, சமயநல்லூர் பகுதிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ்கட்சி சார்பில் நடந்த விழாவிற்கு வட்டாரத்தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாவட்டத்துணைத்தலைவர்கள் கராத்தே சிவா, கச்சைகட்டி பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரதலைவர் ஆர்.எஸ்.ராம்குமார் வரவேற்றார். வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு உதவி தலைமை ஆசிரியர் விஜயரெங்கன் தலைமை தாங்கினார்.
பொட்டுலுப்பட்டி காந்திஜி ஆரம்ப பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி செயலர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளிக்குழு தலைவர் தனபால் முன்னிலை வகித்தார். இதில் பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பரவை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த விழாவுக்கு தலைமையாசிரியர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
சமயநல்லூர் புனித சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டார். இதில் காமராஜரின் வாழ்க்கை வரலாறு பற்றிய பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Related Tags :
Next Story