காமராஜர் பிறந்தநாள் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்


காமராஜர் பிறந்தநாள் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 16 July 2017 4:30 AM IST (Updated: 16 July 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் சிம்மக்கல் நாடார் உறவின்முறை சார்பில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

மதுரை,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிம்மக்கல் நாடார் உறவின்முறை மற்றும் இளைஞர் பேரவை சார்பில் முளைப்பாரி, பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் மதுரை தமிழ்சங்கம் ரோட்டில் இருந்து தொடங்கி விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தை பெரீஸ் மகேந்திரவேல், பெனிட்கரன், ராணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் பால், பன்னீர் அபிஷேகம் செய்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஞானஜெபமணி, சஞ்சீவி மலையான், தங்கையா, ஜோதிபாசு மற்றும் உறவின்முறை நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதைதொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிம்மக்கல் நாடார் உறவின்முறை தலைவர் திலகர், பொருளாளர் வள்ளிராஜன் ஆகியோர் வரவேற்று பேசினர்.
ஓய்வுபெற்ற மருத்துவ அதிகாரி டாக்டர் மதிவாணன், ஓய்வு பெற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைமை பொது மேலாளர் சிவசுப்பிரமணியன், கே.ஆர்.மெட்டல் உரிமையாளர்கள் செல்வராஜ், ராஜவேல், ஒத்தக்கடை கணேசன், குமரி கன்சல்டன்சி அப்பா சுவாமி, ஆத்திக்குளம் கார்த்திக், மதுரை மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் அகஸ்டின், பாலமேடு நாடார் உறவின்முறை தலைவர் பட்டுராஜன், செயலாளர் தனசேகரபாண்டியன், பாலமேடு கார்த்திக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சந்திரமோகன், ஓம் சேர்மபிரபு, ஜோசப் வாசுதேவன், சமத்துவ மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் புறாமோகன், ரெட் இண்டியன்ஸ் நாகராஜன், தெற்குவாசல் ராஜசேகர், வில்லாபுரம் அருள்ராஜன், பால்பாண்டி, குருவித்துறை பெரியசாமி, பசுமலை ஜான்கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக காமராஜர் வேடமணிந்த ஒருவரை சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். முடிவில் சிம்மக்கல் நாடார் உறவின்முறை துணை செயலாளர் மாரிக்கனி நன்றி கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சியில், தெற்குவாசல், பாலமேடு, கரும்பாலை, விக்கிரமங்கலமம், குருவித்துறை, சோழவந்தான், மேலக் கால், கூடல்நகர், ஊர்மெச்சி குளம் உள்பட 40-க்கும் மேற்பட்ட உறவின்முறை நிர்வாகிகள், இளைஞர் பேரவையினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிம்மக்கல் நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் ஆர்.வி.டி.ராமையா செய்திருந்தார்.

Next Story