கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் எலி மருந்தில் பல் தேய்த்த தையல் தொழிலாளி பரிதாப சாவு


கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் எலி மருந்தில் பல் தேய்த்த தையல் தொழிலாளி பரிதாப சாவு
x
தினத்தந்தி 16 July 2017 4:00 AM IST (Updated: 16 July 2017 4:01 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே குடிபோதையில் எலி மருந்தில் பல் தேய்த்த தையல் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள சாமந்தமலையைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 30). தையல் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அசோக்குமார், மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் குடிபோதையில் பல் தேய்க்கும் போது பற்பசைக்கு (பேஸ்ட்) பதிலாக எலிமருந்தை தவறுதலாக பயன்படுத்தி பல் தேய்த்து விட்டார்.

இதையடுத்து அவர் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அசோக்குமாரின் குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அசோக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story