கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் குப்பம் சாலையில் கனமூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.
விசாரணையில் அந்த அரிசி கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து, கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தியதாக கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் ஆண்டர்சன்பேட்டை டேனியல் சாலை பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 800 கிலோ ரேஷன் அரிசி மற்றும் அரிசியை கடத்த பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story