திகில் விளையாட்டு ‘ஜோம்பி வாக்’
வெளிநாட்டு மக்கள் விதவிதமாக பொழுதைக்கழிக்க விரும்புகிறார்கள். மகிழ்ச்சியாக வாழ புதுவிதமாக எல்லாம் விளையாடுகிறார்கள். அதில் ஒன்றுதான் ‘ஜோம்பி வாக்’.

மெக்சிகோ நகரத்தில் உள்ள ரெவலுஷன் ஸ்கெயரில் வருடந்தோறும் இந்த ‘ஜோம்பி வாக்’ மிக பிரமாண்டமாக நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் அனைவரும் அடுத்தவர்களை மிரட்டும் அளவுக்கு ஒப்பனையுடன் அந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்பதுதான் பொதுவிதி.
ஹாலிவுட் படங்களில் ரசிகர்களை மிரளவைக்கும் காட்சிகள் நிறைய இடம்பெறும். அவைகளில் அதிபயங்கரமான தோற்றத்துடன் சிலர் இடம்பெறுவார்கள். அமானுஷ்ய சக்திகளின் திகிலான கற்பனை உருவங்களும் கதாபாத்திரங்களாக உலா வரும். அதுபோன்ற ஒப்பனையுடன் பொதுமக்கள் மத்தியில் உலாவந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு திகில் விளையாட்டுதான் இது.
சினிமாவில் வருவது போன்ற தோற்றங்களை நிஜமாகவே நேரில் கொண்டு வருவது கஷ்டம்தான். சினிமாவில் மேக்அப் பாதி என்றால், கிராபிக்ஸ் மீதி. இரண்டையும் கலந்து பயங்கரமான கதாபாத்திரங்களை உருவாக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட அதற்கு இணையான காட்சிகளை நிஜத்திற்கு கொண்டு வந்து உலவ விடுவதுதான் ஜோம்பி வாக்.
கற்பனை வடிவங்களை நேரில் கொண்டு வந்து நிறுத்துவது கற்பனைத்திறனுக்கு விடப்படும் சவால்தான். அது ஒப்பனைதான் என்றாலும், ஒருவர் அதை பார்த்த உடன் திடுக்கிடவேண்டும். அதில்தான் அந்த ஒப்பனையின் வெற்றியடங்கியிருக்கிறது.
இந்த ஜோம்பி வாக் திகிலும், சவாலும் நிறைந்த விளையாட்டு. மேக்அப் கலைஞர்களின் கற்பனை திறனுக்கு தான் பாராட்டுகள் தரப்படுகிறது. ஒரு அழகான மனிதரை பயங்கரமானவராக ஒப்பனை செய்வது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல. யாரை பார்த்து மக்கள் அதிகம் மிரண்டு போகிறார்களோ, அந்த ஒப் பனையை செய்தவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். இதில் எல்லா வயதினரும் பங்கேற்கலாம்.
ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ‘மேக்அப்’பை போட்டுக் கொண்டு வந்து விளையாட்டில் பங்கேற்கலாம். பெரும்பாலானவர்கள் திரையில் மக்கள் பார்த்து மிரண்ட தோற்றத்திலான ஒப்பனையை செய்துகொள்வார்கள். திரையில் நடமாடிய உருவங்களை நேரில் பார்க்கும்போது மக்களுக்கு வேடிக்கையாக இருக்கும். திரையில் பயங்கர பின்னணி திகில் இசையுடன் வரும் கதாபாத்திரங்கள், மக்கள் மத்தியில் நேரடியாக வந்து, எந்த பின்னணியும் இல்லாமல் பயமுறுத்துவது ‘ஜோம்பிவாக்’கின் சிறப்பு. இந்த விளையாட்டில் கலந்துகொள்கிறவர்கள் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள்.
இந்த திகில் தோற்ற விளையாட்டின் நோக்கம், மக்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்பதுதான். மக்கள் மனோதைரியத்தைப் பெற வேண்டும். சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும். ஒப்பனைக் கலைஞர் களின் கற்பனைத்திறனை மேம்படுத்தவேண்டும் என்பன போன்றவைதான் இந்த விளையாட்டின் நோக்கம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், இந்த திகில் விளையாட்டு பற்றி பல நாடுகளில் விளம்பரம் செய்கிறார்கள். ஊடகங் களும், சமூக வலைதளங்களும் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அதனால் இந்த நிகழ்ச்சி மூலம் பெருமளவு பணம் திரட்டப்படுகிறது. அதனை சமூக சேவை அமைப்புகளுக்காக செலவிடுகிறார்கள்.
முதன்முதலில் ‘ஜோம்பி வாக்’ 2000-ம் ஆண்டில் வட அமெரிக்காவில் நடந்திருக்கிறது. முதல் நிகழ்ச்சியில் போட்டியாளர்களும், பார்வையாளர்களும் குறைந்த அளவே இடம்பெற்றனர். பின்னர் கூட்டத்தை அதிகரிக்க பெருமளவு விளம்பரம் செய்தனர். அதை தொடர்ந்து வருடத்திற்கு வருடம் போட்டியாளர்களும், பார்வையாளர்களும் அதிகரித்தார்கள். பல்வேறு நாடுகளில் இருந்து இந்த நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காகவே நிறைய பேர் வருகிறார்கள். இதற்கு இருக்கும் மவுசை தெரிந்துகொண்டு பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் இந்த திகில் விளையாட்டுப் போட்டி நடத்தப்படுகிறது. பெரிய நிறுவனங்கள் தங்கள் பொருட் களை விளம்பரம் செய்யவும் இந்த நிகழ்ச்சியை பயன் படுத்திக்கொள்கின்றன. இது போன்ற திகில் தோற்ற நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் விரைவில் வந்துவிடும் என தெரிகிறது.

Related Tags :
Next Story