கோபி, தாளவாடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கோபி, தாளவாடியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2017 3:15 AM IST (Updated: 16 July 2017 10:54 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணியினர் கோபி பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கி பேசினார். இதில் கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் மோகன், ஈரோடு மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சிவசக்திவேல், மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணசாமி, சிவசக்திசெல்வராஜ், மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர பொதுச்செயலாளர் மனோஜ் நன்றி கூறினார்.

இதேபோல் தாளவாடியில் இந்து முன்னணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 60–க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கலந்துகொண்டார்கள்.


Next Story