எட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை


எட்டயபுரம் உமறுப்புலவர் மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை
x
தினத்தந்தி 17 July 2017 3:45 AM IST (Updated: 16 July 2017 11:49 PM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் உள்ள உமறுப்புலவர் மணிமண்டபத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

எட்டயபுரம்,

தமிழக சட்டமன்றத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கையின் போது உமறுப்புலவர் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள உமறுப்புலவர் நினைவு மணிமண்டபத்தில் நடந்தது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து உமறுப்புலவர் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிப்பு செய்ததற்காக தமிழக அரசுக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜூக்கும் உமறுப்புலவர் சங்கம், இஸ்லாமிய மக்கள், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜ், உமாமகேசுவரி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், அ.தி.மு.க மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ரூபன் வேலவன், அய்யாத்துரை பாண்டியன், உமறுப்புலவர் ஜமாத் தலைவர் காஜாமைதீன், அ.தி.மு.க. நகர துணை செயலாளர் சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது;–

மக்களின் கோரிக்கைகளை ஏற்று சுதந்திர போராட்ட வீரர் பூலிதேவன், உமறுப்புலவர் ஆகியோர் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசுக்கு மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவினை பத்திரிகையாளர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story