சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


சட்டமன்றம், பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2017 3:15 AM IST (Updated: 17 July 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்,

சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட குழுக்கள் சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட செயலாளர் ஏ.வி.முருகையன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாரிமுத்து, நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினிஅலி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மக்களின் வாழ்வை நாசமாக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது நமது நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

எனவே இந்த நிலை மாற சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்ட செயலாளர் நாகராஜன், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் மனோகரன், திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, மாதர்சங்க மாநில துணை தலைவர் கலைச்செல்வி உள்பட 100–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story