ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 July 2017 3:15 AM IST (Updated: 17 July 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காந்திபார்க்கில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை

ஆலய தரிசன கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், கோவில் வருமானம் கோவிலுக்கே சொந்தம் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரியும் கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் காந்திபார்க்கில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தசரதன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்பாளர் பக்தன் மற்றும் மாநில செயலாளர் கிஷோர்குமார் மற்றும் நிர்வாகிகள் சதீஷ், ஜெய்சங்கர், ஆறுச்சாமி, லீலா கிருஷ்ணன், செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும், இந்து முன்னணி கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.


Next Story