தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி சார்பில், தேனியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
இந்து முன்னணி சார்பில், தேனியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், இதுதொடர்பான ஐகோர்ட்டு தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு தேனி நகர தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் உமையராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் வேலுச்சாமி, பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். முடிவில் தேனி ஒன்றிய அமைப்பு செயலாளர் குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story