செந்துறை, முள்ளுக்குறிச்சி பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
ஈச்சங்காடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது.
செந்துறை,
செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஈச்சங்காடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆர்.எஸ்.மாத்தூர், துளார், ஆதனக்குறிச்சி, முதுக்குளம், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், கோட்டைக்காடு, புதுப்பாளையம், அசாவீரன் குடிக்காடு, சிலுப்பனூர், தளவாய், சிலம்பூர், புக்குழி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story