முல்லுண்டில் காமராஜர் சாலை பெயர் சூட்டு விழா


முல்லுண்டில் காமராஜர் சாலை பெயர் சூட்டு விழா
x
தினத்தந்தி 17 July 2017 3:08 AM IST (Updated: 17 July 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

முல்லுண்டில் காமராஜர் சாலை பெயர் சூட்டு விழா நடந்தது. இதில் சரத்குமார் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார்.

மும்பை,

மும்பை முல்லுண்டு மேற்கு பி.கே.ரோட்டில் உள்ள ஆஷா நகரில் புதிய சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என்ற முல்லுண்டு காமராஜர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி ஆஷா நகர் புதிய சாலைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை வைப்பதற்கு அனுமதி அளித்தது.

இதன்படி அந்த சாலைக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டு விழா நேற்று நடந்தது.

இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான ஆர்.சரத்குமார் கலந்து கொண்டு காமராஜர் பெயரில் அமைந்த சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் காமராஜர் சாலை பெயர் சூட்டு விழா நிகழ்ச்சி முல்லுண்டில் உள்ள காளிதாஸ் உள்அரங்கத்தில் நடந்தது.

விழாவுக்கு திருநெல்வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை சேர்மன் ஏ.ராமராஜா நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், பொருளாளர் மைக்கேல் ஜார்ஜ் நாடார், துணை சேர்மன் டி.எம்.ரெம்ஜிஸ், ஹரிராம் சேட், ஆ.பி.சுரேஷ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடகிழக்கு மும்பை பா.ஜனதா துணை தலைவர் கே.ராஜ்குமார் வரவேற்று பேசினார். கவிஞர் செந்தூர்நாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் சிறப்புரை ஆற்றி பேசினார். அப்போது அவர் பெருந்தலைவர் காமராஜருக்கு புகழாரம் சூட்டினார். விழாவில் மதுரை தமிழ் இலக்கிய மன்ற தலைவர் அவணி மாடசாமி, சர்தார் தாராசிங் எம்.எல்.ஏ., மனோஜ் கோடக், கவுன்சிலர்கள் பிரகாஷ் கங்காதரே, நீல்சோமையா, சமிதா வினோத் காம்பிளே, ஐ.ஆர்.எஸ். அதிகாரி நந்தகுமார், காமராஜ் நகர் நாடார் பொதுநல சங்க தலைவர் நடராஜன், பவாய் பாரத்ரத்னா காமராஜர் நற்பணி மன்ற செயலாளர் லிங்கதுரை, அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்ற தலைவர் மாயாண்டி, செயலாளர் எட்வர்ட், தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வாககுழு உறுப்பினர் ஜெபக்குமார் ஜேக்கப் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

விழாவையொட்டி மதுரை பாய்ஸ் குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான தமிழர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை முல்லுண்டு காமராஜர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story