இந்திய ரூபாய் நோட்டின் பெருமை..!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்திற்கு இணையாக மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைத்திருக்கிறார்கள். அப்படி என்ன சாதனை செய்தது மங்கள்யான் என்பதனை பற்றி பார்ப்போம்..!
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட, மங்கள்யான் செயற்கைக்கோள் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் 2013-ம் ஆண்டு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த வெற்றி உலகிலேயே முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தது. அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் செவ்வாய் பயணத்தை 51 முறைகள் முயற்சி செய்து அதில் 21 முறைகளே வெற்றி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விஞ்ஞானிகள் தங்களுடைய முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார்கள்.
மங்கள்யான் செயற்கைக்கோளினை எதிர்கால தலைமுறையினர் நினைவில் கொள்ளும் வகையில் மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள புத்தம் புது 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்திய அரசு வெளியிட்ட 2 ரூபாய் நோட்டில் செயற்கைக்கோள் இடம் பெற்றிருந்தது. அதன் பின்னர் நாட்டின் தேசிய விலங்கு புலி இடம் பெற்றிருந்தது. 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டபோது பசுமை புரட்சியைக் குறிப்பிடும் வகையில் டிராக்டரில் விவசாயி உழுவது போன்ற படம் இடம் பெற்றது.
50 ரூபாய் நோட்டுகளில் நாடாளுமன்றம், 100 ரூபாய் நோட்டுகளில் இமயமலைப் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இப்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டில் டெல்லி செங்கோட்டை படம் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, ஐரோப்பா என உலகத்தில் வல்லரசு நாடுகளின் மத்தியில் இந்திய விஞ்ஞானிகளின் வல்லமையை உயரத்தில் தூக்கி வைத்தது மங்கள்யான். அந்தப் பெருமையே அதன் உருவத்தை இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் இடம் பெறச் செய்ய முக்கிய காரணமாக அமைந்தது. இது மங்கள்யான் செயல்பாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகும்.

Related Tags :
Next Story