இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் 313 பணியிடங்கள்


இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் 313 பணியிடங்கள்
x
தினத்தந்தி 17 July 2017 1:26 PM IST (Updated: 17 July 2017 1:26 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் 313 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சுருக்கமாக இஸ்ரோ (ISRO) என்று அழைக்கப்படுகிறது. தற்போது இதன் ஆய்வு மைய கிளைகளில் உதவியாளர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. அசிஸ்டன்ட் பணிக்கு 311 பேரும், அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 2 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு மற்றும் கிளை வாரியான பணியிட விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31-7-2017-ந் தேதியில் 18 முதல் 26 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 29 வயதுடையவர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 31 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், விதவைகள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

கலை, அறிவியல், வர்த்தகம், நிர்வாகம், கணினி சார்ந்த பட்டப்படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். அனைவரும் கணினி இயக்கும் திறன் பெற்றிருப்பது அவசியம்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் தலா ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் திறமைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான எழுத்துத் தேர்வு 15-10-2017 அன்று நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 31-7-2017-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். சான்றிதழ் நகல்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவை தேவையான இடங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். பின்னர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு விண்ணப்பதாரர் பல பணிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம். அதற்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டும். ஒரே பணிக்காக பல விண்ணப்பங்களை அனுப்பக்கூடாது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.isro.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

Next Story