உணவு கழகத்தில் 336 பணிகள் 8-ம் வகுப்பு படிப்பு தகுதி


உணவு கழகத்தில் 336 பணிகள் 8-ம் வகுப்பு படிப்பு தகுதி
x
தினத்தந்தி 17 July 2017 1:30 PM IST (Updated: 17 July 2017 1:30 PM IST)
t-max-icont-min-icon

இந்திய உணவுக் கழக நிறுவனத்தில் 336 பணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 8-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய உணவுக் கழகம், மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. உணவு தானிய வினியோகம் மற்றும் நிர்வாகம் சார்ந்த மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் இது. தற்போது இந்த நிறுவனத்தில், காவலாளி (வாட்ச்மேன்) பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில அலுவலகங்களில் 281 பணியிடங்களும், தமிழகத்தில் 55 பணியிடங்களும் உள்ளன. மொத்தம் 336 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ராஜஸ்தானில் உள்ள 281 பணியிடங்களில் பொதுப் பிரிவுக்கு 141 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 56 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 48 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 36 இடமும் உள்ளது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...

வயது வரம்பு

1-7-2017-ந் தேதியில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி:

8-ம் வகுப்பு படித்தவர்கள், முன்னாள் படைவீரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.

கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இந்த கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 7-8-2017-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரத்தை www.fciregionaljobs.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழகத்தில் 55 பணிகள்:

தமிழக மண்டல உணவு கழக நிறுவனத்தில் 55 பணியிடங்கள் உள்ளன. இட ஒதுக்கீடு வாரியாக பொது - 29, ஓ.பி.சி. -15, எஸ்.சி.-10, எஸ்.டி.-1 பணியிடங்கள் உள்ளன.

8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 25 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தி, 8-8-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரத்தை www.fcijobportaltn.com என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Next Story