பாரீசில் இருந்து விமானத்தில் தோட்டாவுடன் வந்த வாலிபர் கைது


பாரீசில் இருந்து விமானத்தில் தோட்டாவுடன் வந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 July 2017 3:45 AM IST (Updated: 19 July 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

பாரீசில் இருந்து விமானத்தில் தோட்டாவுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

பாரீசில் இருந்து விமானத்தில் தோட்டாவுடன் வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பயணியிடம் தோட்டா

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சம்பவத்தன்று விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.

இந்த சோதனையின் போது அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த வருண் கல்ரா (வயது25) என்ற வாலிபரின் பையில் துப்பாக்கி தோட்டா இருப்பதை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து அவர்கள் சகார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வாலிபர் கைது

போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சுற்றுலாவிற்காக தான் அமெரிக்கா மற்றும் பாரீஸ் சென்றிருந்ததாகவும், அமெரிக்காவில் தனது நண்பர் ஒருவர் ஞாபகார்த்தமாக வைத்து கொள்ளும்படி அந்த தோட்டாவை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

விமானத்தில் தோட்டாவை எடுத்து வரக்கூடாது என்ற விதிமுறை தெரியாது என்றும், அவர் போலீசாரிடம் கூறினார். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story