தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை கலெக்டர் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இயங்கும் பெண்கள், குழந்தைகள் தங்கும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
விடுதிகள்தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் 18 வயதுக்கு உட்பட்ட, வளர் இளம் பெண்கள், பள்ளி விடுதிகள், பெண்கள் விடுதிகள், இல்லங்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள், இல்லங்கள் ஒழுங்குமுறைபடுத்துதல் சட்டத்தின் கீழ் பதிவு மற்றும் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் பதிவு மற்றும் உரிமம் பெற மாவட்ட கலெக்டர், தூத்துக்குடி என்ற பெயரில் ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி காசோலை அல்லது வங்கி வரைவோலையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
நடவடிக்கைமேற்காணும் விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் ஒரு மாதத்துக்குள் இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல் செயல்படும் விடுதி, இல்லங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு, மணி நகர், பாளையங்கோட்டை ரோடு, தூத்துக்குடி, தொலைபேசி எண்: 0461–2331188 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.