சிக்கமகளூரு மாவட்டத்தில் பரவலாக மழை துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது
சிக்கமகளூரு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
சிக்கமகளூரு,

பரவலாக மழை
கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. குறிப்பாக சிக்கமகளூரு மாவட்டத்தில் மழை பெய்யாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் ஓடும் துங்கா, பத்ரா, ஹேமாவதி உள்ளிட்ட ஆறுகள் வறண்டன.
இந்த நிலையில் இவ்வாண்டும் பருவமழை இதுவரையில் நன்றாக பெய்யவில்லை. இப்படி இருக்க கடந்த 5 நாட்களாக சிக்கமகளூரு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் லேசான மழை பெய்தாலும், பல இடங்களில் பலமாக கொட்டித்தீர்த்துள்ளது.
மக்கள் மகிழ்ச்சி
இதனால் துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக விவசாயிகளும், காபித்தோட்ட அதிபர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக சிக்கமகளூரு, மூடிகெரே, என்.ஆர்.புரா, தரிகெரே ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மூடிகெரே தாலுகா கலசாவில் இருந்து ஹோரநாடு செல்லும் வழியில் அமைந்திருக்கும் தரைப்பாலம் மூழ்கும் நிலையில் உள்ளது.
காயமின்றி உயிர் தப்பினர்
மேலும் சூறாவளி காற்றின்போது என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூர் அருகே சித்ரமக்கி கிராமத்தில் வசித்து வரும் லட்சுமணன் என்பவருடைய வீட்டின் மீது மரம் ஒன்று வேரோடு சரிந்து விழுந்தது. இதில் வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் நாசமடைந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
இதேபோல் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்றினால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. அவற்றை வனத்துறையினரும், நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்களும் சேர்ந்து சீரமைத்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story