நாமக்கல்லில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியல்
நாமக்கல்லில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சி 15-வது வார்டுக்கு உட்பட்டது பிள்ளையார் கோவில் தெரு. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அப்பகுதியை பெண்கள் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் திடீரென காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது :-
எங்கள் பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதேபோல் 3 ஆழ்துளை கிணறுகளில் ஒன்றில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் வருகிறது. மீதமுள்ள 2 ஆழ்துளை கிணறுகள் பழுதான நிலையில் உள்ளன. இவற்றை சரிசெய்து உப்பு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் தொடர்ச்சியாக அப்பகுதிக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப் பட்டது.

Related Tags :
Next Story