கனவை நிறைவேற்றும் வயர்


கனவை நிறைவேற்றும் வயர்
x
தினத்தந்தி 20 July 2017 5:00 PM IST (Updated: 20 July 2017 3:20 PM IST)
t-max-icont-min-icon

சுவீடனை சேர்ந்த இன்ஸ்பைர் நிறுவனம், ஆண்ட்ராய்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட் கேபிள் வயரை தயாரித்துள்ளது.

 கையில் எடுத்துச் செல்லக்கூடிய இந்த வயர் டி.வி. செட்டாப் பாக்ஸ் போல செயல்படக்கூடியது. சாதாரண ஓட்டலில் தங்கினாலும் இந்த கேபிள்மூலம் விரும்பிய செயற்கைகோள் சானல்களை பார்க்க முடியும். அத்துடன் அந்த பகுதியை வை-பை தளமாக மாற்றித் தந்துவிடும். நட்சத்திர ஓட்டல்களை மையப்படுத்தி இந்த வயர் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சைகையை மொழி பெயர்க்க...

காது கேட்கும் திறன் குறைந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் உரையாடலுக்கு உதவும் வகையில் வந்திருக்கிறது மொழிபெயர்க்கும் ஸ்மார்ட் கையுறை. பாதிக்கப்பட்டவர்கள் இதை அணிந்து கொண்டு சைகை செய்தால் அதை எழுத்துருக்களாக (பாண்ட்) மாற்றி நமது ஸ்மார்ட்போனுக்கு அனுப்பிவிடும். இதனால் சைகை புரியாதவர்களும் எளிதில் அவர்களின் உணர்வுகளையும், உரையாடல்களையும் புரிந்து கொள்ளலாம். ‘லாங்வேஜ் குளோவ்’ எனப்படும் இந்த கையுறையை சாண்டியாகோவில் இயங்கும் கலிபோர்னியா பல்கலைக்கழக பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இமேஜின் கப் அமைப்பு ‘எனபிள் டாக் குளோவ்’ என்ற பெயரில் இதுபோன்ற கையுறையை ஏற்கனவே வெளியிட்டிருப்பது நினைவூட்டத்தக்கது. அது சைகையை ஒலியாக உச்சரித்துக் காட்டும் கையுறையாகும்.

Next Story