திருப்பரங்குன்றம் அருகே புதருக்குள் மறைந்து வரும் மயானம்
திருப்பரங்குன்றம் அருகே மயானத்தை சுற்றிலும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், மயானம் இருப்பது தெரியாமல் மறைந்து வருகிறது.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வேடர் புளியங்குளம் கிராமம், இங்குள்ள ஆதிதிராவிடர்களுக்கான மயானத்தில் ஒரு ஆழ்துளை கிணறு (போர்வெல்) இருந்தது. அது பழுதாகி பல மாதங்களாகி விட்டது. அதை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கூறியதை அடுத்து குழாய்கள் கழற்றப்பட்டது. ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் மயானத்திற்கு இறுதி சடங்கிற்காக வருபவர்கள் தண்ணீர் வசதி இன்றி பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மயானத்திற்குச் செல்லும் பாதை, முட்புதர்கள் வளர்ந்து மண்டி கிடப்பதால், மயானம் இருப்பது தெரியாமல் மறைந்துள்ளது. அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பல மாதங்களாகியும் ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளுவதாக தெரியவில்லை. இதனால் மயானத்தில் வளர்ந்துள்ள புதருக்குள் இருந்து விஷத்தன்மை கொண்ட பூச்சிகள் படையெடுத்த வண்ணம் உள்ளது. இதனால் மயானத்திற்கு செல்பவர்கள் பீதியுடன் சென்று வர வேண்டிய அவலம் உள்ளது.
இது குறித்து வேடர்புளியங்குளம் ஆதிதிராவிட காலனி பொதுமக்கள் கூறியதாவது:-
பல மாதங்களாக பழுதாகி கிடக்கும் ஆழ்துளை குழாயை சரி செய்து தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் மயானத்திற்கு செல்வோர் அங்கு தண்ணீர் வசதி இல்லாததால் பணம் கொடுத்து கையோடு தண்ணீரையும் கேன்களில் வாங்கி செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மயானத்தில் விரைவில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். மேலும் புதராக உள்ள முட்செடிகளையும், கருவேல மரங்களையும் அகற்றி சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளோம். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினை குறித்து போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story