அரசு கலைக்கல்லூரியில் அறிவியல் விழிப்புணர்வு முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


அரசு கலைக்கல்லூரியில் அறிவியல் விழிப்புணர்வு முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2017 4:00 AM IST (Updated: 21 July 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் அறிவியல் விழிப்புணர்வு முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் வேதியியல் துறை மற்றும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகம் இணைந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 470 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தற்பொழுது 11-ம் வகுப்பு பயிலும் 150 மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு முகாம் நேற்று தொடங்கியது. முகாம் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெற உள்ளது.

முகாமுக்கு கல்லூரி முதல்வர் சின்னையா தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார், பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் செல்வபாண்டியன், இயற்பியல் பேராசிரியர் ரவிசங்கர், மத்திய அரசின் பட்நாகர் விருது பெற்ற முனைவர் ஜெயராமன் உள்பட மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story