தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோட்டூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டூர்,
கோட்டூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் சிவஞானம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்கள் அனைத்தும் ரத்து செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தின் நாட்களை அதிகரித்து, ரூ.400 ஊதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாட்டிறைச்சிக்கு எதிரான தடையை நீக்க வேண்டும். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு வருகிற 25-ந் தேதி மாநில அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது. கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெறும் சிறை நிரப்பும் போராட்டத்தில் கோட்டூர் ஒன்றியம் சார்பில் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அம்புஜம், முன்னாள் துணைத்தலைவர் தங்கையன், ஒன்றிய துணைச்செயலாளர் செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயராமன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) பரந்தாமன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பழனி, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story