கடலூர் கிளை சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்


கடலூர் கிளை சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 21 July 2017 3:30 AM IST (Updated: 21 July 2017 2:31 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் கிளை சிறையில் இருந்து கைதி தப்பி ஓடினார்.

கடலூர், 

நெல்லிக்குப்பம் துலுக்கர்பாளையம் திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் பிரதீப்குமார்(வயது 19). கடந்த 17-ந்தேதி இவரை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து கடலூர் கிளைசிறையில் அடைத்தனர்.

நேற்று காலையில் அவர் சிறையில் உள்ள மரத்தின் மீது ஏறி காம்பவுண்டு சுவர் வழியாக வெளியே குதித்து தப்பி ஓடிவிட்டார். சிறையில் இருந்து அவர் தப்பிச்சென்ற தகவல் அறிந்ததும், சிறைக்காவலர்கள் நாலாபுறமும் அவரை தேடினார்கள்.

மடக்கி பிடித்தனர்

சிறையில் இருந்து தப்பிச்சென்ற பிரதீப்குமார் நெல்லிக்குப்பத்தில் உள்ள அவருடைய வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக சிறைகாவலர்கள் விரைந்து சென்று பிரதீப் குமாரை மடக்கி பிடித்துக்கொண்டு வந்து கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் கிளைச்சிறை கண்காணிப்பாளர் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story