எனது பிறந்தநாளுக்கு ‘பரிசு பொருட்கள் வேண்டாம்; விவசாய நிவாரண நிதி கொடுங்கள்’ முதல்– மந்திரி வேண்டுகோள்

எனது பிறந்தநாளுக்கு ‘பரிசு பொருட்கள் வேண்டாம்; விவசாய நிவாரண நிதி கொடுங்கள்’ முதல்– மந்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 21 July 2017 4:00 AM IST (Updated: 21 July 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

எனது பிறந்த நாளுக்கு பரிசு பொருட்கள் எதுவும் வேண்டாம், விவசாய நிவாரண நிதி வழங்குங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

மும்பை,

எனது பிறந்த நாளுக்கு பரிசு பொருட்கள் எதுவும் வேண்டாம், விவசாய நிவாரண நிதி வழங்குங்கள் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்தார்.

பிறந்த நாள்

முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பிறந்தநாள் நாளை(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதல்- மந்திரியின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். இந்தநிலையில் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பரிசு பொருட்கள் வேண்டாம்

தொண்டர்கள் எனது பிறந்தநாளையொட்டி பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம். மேலும் பொன்னாடை, பரிசுப்பொருட்கள் போன்றவற்றை வழங்க வேண்டாம். நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் துயரை துடைப்பதையே என் முதல் கடமையாக கருதுகிறேன். எனவே கட்சியினர், தொண்டர்கள் என் பிறந்தநாள் விழாவிற்கு செய்யும் செலவினை தவிர்த்து, அதை விவசாயிகள் நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story