டோம்பிவிலியில் பெண் கொலை: தலைமறைவான கள்ளக்காதலன் கைது
டோம்பிவிலியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
தானே,

கட்டிட காவலாளி
தானே அருகே உள்ள டோம்பிவிலியை சேர்ந்தவர் சூரியகாந்த் மிஸ்ரா. கட்டிட காவலாளியாக இருந்து வந்தார். இவரது மனைவி தாரா.
இந்தநிலையில் கடந்த 12-ந்தேதி தாரா வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத் தினர். இதில், வரதட்சணை கேட்டு சூரியகாந்த் மிஸ்ரா அடிக்கடி தாராவை துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாராவின் கணவர் சூரியகாந்த் மிஸ்ராவை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
கள்ளக்காதலன் கைது
அப்போது அவர் மனைவி தாராவை கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தாராவிற்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய்குமார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. தாராவிற்கு வேறு ஆண்களுடனும் தொடர்பு இருக்கலாம் என அஜய்குமார் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்றும் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அஜய்குமார், தாராவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அங்கிருந்து உத்தரபிரதேசத்திற்கு தப்பிச்சென்று தலைமறைவானது தெரியவந்தது.
இதையடுத்து உத்தரபிரதேசம் சென்ற போலீசார் அஜய்குமாரை கைது செய்து, டோம்பிவிலி அழைத்து வந்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 2 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டார்.

Related Tags :
Next Story