நம்பியூரில் ரோட்டோர பள்ளத்தில் பள்ளிக்கூட வேன் இறங்கியது


நம்பியூரில் ரோட்டோர பள்ளத்தில் பள்ளிக்கூட வேன் இறங்கியது
x
தினத்தந்தி 21 July 2017 10:45 AM IST (Updated: 21 July 2017 10:45 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூரில் ரோட்டோர பள்ளத்தில் பள்ளிக்கூட வேன் இறங்கியது. இதில் 49 மாணவ-மாணவிகள் உயிர்தப்பினர்.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் கிளியம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ விகாஸ் மெட்ரிக் பள்ளிக்கூடத்தை சேர்ந்த வேன் ஒன்று நேற்று காலை 8.45 மணிஅளவில் சென்று கொண்டு இருந்தது.

அந்த வேனில் 49 மாணவ-மாணவிகள் இருந்தனர். வேன் கிளியம்பாளையம் பகுதியில் உள்ள குறுகலான சாலையில் சென்றது. அப்போது எதிரே மற்றொரு பள்ளிக்கூட வேன் ஒன்று வந்தது. இதனால் 2 வேன்களும் சாலையோரம் ஒதுங்கியநிலையில் சென்றது. அப்போது ஸ்ரீ விகாஸ் பள்ளிக்கூட வேன் நிலைதடுமாறியபடி திடீரென சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கியது.

இந்த விபத்தில் மாணவ-மாணவிகள் வேனுக்கு உள்ளேயே ஒருவர்மீது ஒருவர் விழுந்தனர். அவர்கள் அய்யோ அம்மா என அலறினர். இதில் அதிர்ஷ்டவமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். வேன் விபத்துக்குள்ளான தகவல் பரவியதும் அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.

அவர்கள் உடனடியாக வேனுக்குள் சிக்கி இருந்த மாணவ-மாணவிகளை ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டனர். அதன்பின்னர் மாற்று வேன் வரவழைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story