தேனி மலைப்பகுதியில் தீப்பிடித்தது, வனவளத்தை அழிக்க சதிச்செயலா?
தேனி மலைப்பகுதியில் தீப்பிடித்தது. இது வன வளத்தை அளிக்க திட்டமிட்ட சதிச்செயலா? என்பதை கண்டறிய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக தேனி பனசலாறு உற்பத்தியாகும் பகுதியில் தீ விபத்து அடிக்கடி ஏற்படுகிறது. மழை பெய்த சில நாட்கள் கழித்ததும் தீ விபத்து ஏற்பட்டு வருவது விவசாயிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில், நேற்று தேனி வீரப்ப அய்யனார் கோவில் மலைப்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்த பகுதியானது பனசலாறு உற்பத்தியாகி வரும் பகுதியாகும். இந்த ஆறு வற்றாத நதி என்ற பெயருடன் திகழ்கிறது.
கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் இந்த ஆற்றில் நீர்வரத்து இருந்து கொண்டே இருக்கும். இடையில் இந்த தண்ணீரை சிலர் திருடிச் சென்றாலும், மலையில் இருக்கும் ஊற்றுகள் வற்றுவது கிடையாது. இதற்கு முக்கிய காரணம் இந்த மலைப்பகுதியில் உள்ள புற்கள் ஆகும்.
இந்த புற்கள் மழைநீரை சேமித்து வைத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றுபோல் தண்ணீரை ஆற்றுக்கு அனுப்பி வைத்து வருகிறது. அப்படி இருக்கையில் இங்கிருக்கும் புற்கள் அடர்ந்து இருக்கும் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இந்த தீ அருகில் உள்ள மரங்களிலும் பற்றி எரிந்து மரங்களும் தேசம் அடைவதாக கூறப்படுகிறது.
இந்த மலைப்பகுதியில் உள்ள புற்களை காலி செய்து விட்டால், வரும் காலங்களில் மழை பெய்தால் மழைநீர் காட்டாறாக ஓடி வருவமே தவிர, வற்றாத நதியாக இருக்குமா என்றால் அது கேள்விக்குறி தான். புற்கள் இல்லை என்றால் இங்குள்ள ஊற்றுகள் வற்றிப் போகும் அபாயம் உள்ளது. எனவே புற்களில் அடிக்கடி ஏற்படும் தீ என்பது வன வளத்தை அழிக்க திட்டமிட்ட சதிச்செயலாக இருக்குமோ? என விவசாயிகள் கருதுகின்றனர். ஆனால், இந்த வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து என்பது அத்திப் பூத்தாற்போல் உள்ளது.
எனவே, வற்றாத நதியை சுமக்கும் இந்த மலைப்பகுதியை வனத்துறையினர் பாதுகாக்க வேண்டும். இங்கு தீ வைக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story