விதிமுறைகளை மீறி மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ, பஸ்கள் பறிமுதல்


விதிமுறைகளை மீறி மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ, பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 July 2017 5:00 AM IST (Updated: 22 July 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

விதிமுறைகளை மீறி மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற தனியார் பள்ளி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருத்தணி, 

திருத்தணி கோட்டத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் உரிய அனுமதியின்றி பஸ்கள், ஆட்டோக்கள் மூலம் மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்வதாக திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கருக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில் திருத்தணி பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் திருத்தணி தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பொதட்டூர்பேட்டையை அடுத்த காண்டாரிகுப்பம் என்ற இடத்தில்் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளிக்கு விதிமுறைகளை மீறி உரிய அனுமதி இன்றி மாணவ-மாணவிகளை ஏற்றிச்சென்ற 2 பஸ்கள் மற்றும் அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற ஒரு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் பொதட்டூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story