பள்ளத்தில் சிக்கிய கார் நம்பர் பிளேட்டை கழற்றி சென்ற நபர்கள்


பள்ளத்தில் சிக்கிய கார் நம்பர் பிளேட்டை கழற்றி சென்ற நபர்கள்
x
தினத்தந்தி 23 July 2017 2:15 AM IST (Updated: 22 July 2017 7:34 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி நேற்று அதிகாலையில் கார் சென்றது. அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் இறங்கி விபத்துக்குள்ளானது.

அரக்கோணம்,

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி நேற்று அதிகாலையில் கார் சென்றது. அரக்கோணத்தை அடுத்த பெருமுச்சி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் இறங்கி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த நபர்கள் இறங்கி சென்றதாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரம் கழித்து விபத்து நடந்த இடத்திற்கு ஜீப்பில் வந்த மர்ம நபர்கள் காரின் நம்பர் பிளேட்டை கழற்றிக்கொண்டு சென்றுவிட்டனர். இதனையடுத்து காலை 10 மணி அளவில் 2 பேர் கிரேனுடன் அங்கு சென்று விபத்தில் சிக்கிய காரை தூக்கி ரோட்டில் நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

விபத்தில் சிக்கிய காரில் எத்தனை நபர்கள் இருந்தார்கள், காரில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது, காரின் நம்பர் பிளேட்டை ஏன் கழற்றி செல்ல வேண்டும் என பல்வேறு கோணங்களில் அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story