குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடலூர்,
நெய்வேலி அருகே உள்ள மந்தாரக்குப்பம் சிவாஜி நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சவுந்திரராஜன். இவர் டீ குடிப்பதற்காக நெய்வேலி வளையமாதேவி கூட்ரோடு அருகில் உள்ள ஒரு கடைக்கு வந்தார். அப்போது, மந்தாரக்குப்பம் சிவாஜிநகரை சேர்ந்த கணேசன் மகன் ரமேஷ்(வயது 25) என்பவர் ஜெகநாதனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜிகுமார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
ரமேஷ் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருந்ததையடுத்து அவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ரமேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதையடுத்து ரமேசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ராஜேஷ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை மந்தாரக்குப்பம் போலீசார், கடலூர் சிறையில் இருக்கும் ரமேசிடம் வழங்கினர்.

Related Tags :
Next Story