தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும்


தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும்
x
தினத்தந்தி 23 July 2017 3:30 AM IST (Updated: 23 July 2017 1:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி

செம்பட்டி,

ஆத்தூர் வட்டார நெல் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழும் கருங்குளத்தை தூர்வாரும் பணியை முன்னாள் அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் கமல்ஹாசனை, அ.தி.மு.க. அமைச்சர்கள் சீண்டியதன் மூலம் அவர் தனது ரசிகர்களுக்கு அரசின் ஊழல் புகார்களை அரசின் இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்றார். உடனடியாக இணையதளம் முடக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. சூரியனை கருமேகம் மறைத்தால், வெளிச்சம் வெளியே வராது என்பதுபோல் உள்ளது.

இணையதளத்தை முடக்கலாம், இளைஞர்களின் எழுச்சியை முடக்க முடியுமா?. இளைஞர்கள் விரும்பும் நல்லாட்சி மு.க.ஸ்டாலினால் மட்டுமே கொடுக்க முடியும். விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மலரும். திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக பழனி தொகுதியில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் 5 முறைக்கு மேல் சட்டமன்றத்தில் தெரிவித்த பின்பு சுகாதாரத்துறை அமைச்சர் பார்வையிட்டுள்ளார். இது, மக்கள் நலனில் இந்த அரசுக்கு அக்கறையில்லாததை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், சின்னாளபட்டி முன்னாள் நகர செயலாளர் அறிவழகன் மற்றும் தி.மு.க. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story