சென்னை மாநகராட்சி பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்


சென்னை மாநகராட்சி பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 23 July 2017 3:15 AM IST (Updated: 23 July 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

சென்னை

சென்னை அமைந்தகரை செனாய்நகரில் உள்ள மாநகராட்சி பெண்கள் நடுநிலைப்பள்ளியில் நேற்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஏ.சதாசிவம் தலைமையிலான குழுவினர் டெங்கு காய்ச்சல் பரவுதல் மற்றும் விளைவுகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மற்றும் கூட்டுப்புழு ஆகியவற்றை உயிருடன் பாட்டில் தண்ணீரில் அடைத்து மாணவிகளிடம் காட்டப்பட்டது. ஏடிஸ் கொசுவை கட்டுப்படுத்துவது, உணவு பாதுகாப்பு முறைகள் குறித்து வீடியோக்கள் மூலமும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘வீடுகளில் தேவையில்லா இடங்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டாலே போதும், டெங்குவை விரட்டி விடலாம். இதில் மாணவ–மாணவிகளின் பங்கு அவசியம் என்பதால் பள்ளிகளில் இந்த முகாம்கள் நடத்தி வருகிறோம்’’, என்றனர். 

Next Story