எல்லை கடந்த நேசம்
இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயதான எமிலி லார்டர் என்ற இளம் பெண் உகாண்டா நாட்டை சேர்ந்த இரண்டரை வயது சிறுவனை தத்தெடுக்க முன்வந்திருக்கிறார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயதான எமிலி லார்டர் என்ற இளம் பெண் உகாண்டா நாட்டை சேர்ந்த இரண்டரை வயது சிறுவனை தத்தெடுக்க முன்வந்திருக்கிறார். நாடு கடந்து சென்று குழந்தையை தத்தெடுத்திருப்பதன் பின்னணியில் நெகிழ்ச்சியான உறவு பந்தம் பின்தொடர்ந்திருக்கிறது.
இங்கிலாந்தில் ஆசிரியையாக பணிபுரிந்த எமிலி 2015-ம் ஆண்டு குழந்தைகளுக்கான அறக்கட்டளை ஒன்றில் வேலை செய்வதற்காக தன்னார்வலராக உகாண்டாவுக்கு சென்றிருக்கிறார். அப்போது பிரசவத்தில் உயிரிழந்த ஒரு பெண்ணின் குழந்தை அனாதையாக்கப்பட்டிருக்கிறது. அந்த குழந்தையை அரவணைத்து அறக்கட்டளை மையத்துக்கு எடுத்து சென்றிருக்கிறார். தாயை இழந்த அந்த குழந்தை எமிலியிடம் நெருக்கமாகிவிட்டது. உகாண்டாவில் இருந்து நாடு திரும்பிய பிறகு அக் குழந்தையை பற்றிய நினைவுகளும், ஏக்கங்களும் அதனை தத்தெடுக்கவைத்துவிட்டது.
“உகாண்டாவில் பிரசவத்தில் உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கில் பங்கேற்றேன். அந்த பெண்மணிக்கு 7 குழந்தைகள். கடைசி குழந்தையை பராமரிக்க ஒருவரும் முன்வரவில்லை. பிறந்து இரண்டே நாளான அந்த குழந்தையை பார்க்க பரிதாபமாக இருந்தது. அதனை அறக்கட்டளை மையத்துக்கு கொண்டு வந்தேன். அக்குழந்தையை பராமரிப்பதே என் முழுநேர வேலையானது. இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இங்கிலாந்துக்கு திரும்ப வேண்டியிருந்தது. அந்த பிஞ்சுக் குழந்தையை விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல், மேலும் இரண்டு மாதங்கள் தங்கினேன். பின்னர் அரை மனதுடன் குழந்தையை பிரிந்து இங்கிலாந்து திரும்பினேன். ஆனால் என் மனம் குழந்தை பற்றிய கவலையிலேயே மூழ்கியிருந்தது. அதனை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை” என்கிறார், எமிலி.
இங்கிலாந்தில் ஆசிரியராக பணி புரிந்ததால் எமிலியால் நினைத்த வுடன் உகாண்டாவுக்கு சென்று குழந்தையை பார்க்க முடியவில்லை. பள்ளிக்கு விடுமுறை விட்டவுடன் உடனே உகாண்டாவுக்கு குழந்தையை பார்க்க கிளம்பி சென்றிருக்கிறார். தன்னிடம் பாசமாக பழகிய அந்த குழந்தைக்கு ஆடம்ஸ் என பெயரிட்டிருக்கிறார்.
“ஒவ்வொரு முறையும் அந்த குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு விட்டு பிரிய மனமின்றி நாடு திரும்புவேன். ஒருகட்டத்தில் அவனை விட்டு என்னால் பிரிந்து இருக்கவே முடியவில்லை. அவனும் நான் இங்கிலாந்து திரும்பிய பிறகு என்னை நினைத்து ஏங்குவதாகவும், அழுவதாகவும் கூறினார்கள். அவன் என்னையே எதிர்பார்த்து காத்திருப்பது என்னை நெகிழ்ச்சியடைய செய்துவிட்டது. அதனால் அவனை தத்தெடுக்க முடிவு செய்தேன். ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து விட்டு உகாண்டா சென்று தத்தெடுப்பதற்கான வேலைகளை தொடங்கினேன். ஆனால் குழந்தையை நான் நினைத்தபடி எளிதாக தத்தெடுக்க முடியவில்லை. ஏராளமான நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. வழக்கறிஞர், நீதிமன்றம், இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்கான கட்டணங்கள் என அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. அதனால் நன்கொடை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். பலரும் உதவ முன்வந்திருக் கிறார்கள். போதுமான பணம் சேர்ந்தவுடன் தத்தெடுக்கும் பணியை முடித்துவிட்டு, அவனை அழைத்துக்கொண்டு இங்கிலாந்துக்கு சென்றுவிடுவேன். அவன் இல்லாமல் என் எதிர்கால வாழ்க்கை இல்லை” என்று நெகிழ்ச்சியாக சொல்கிறார் எமிலி லார்டர்.

Related Tags :
Next Story