அப்பா.. ‘அடேங்கப்பா..’
‘உங்களுக்கு எத்தனை குழந்தைகள் இருக்கின்றன?’ என்று குல்ஜார்கானிடம் கேட்டால், தனது குழந்தைகளை எல்லாம் வரிசையாக நிற்கவைத்து எண்ணிவிட்டு “எனக்கு இப்போது வரை 36 குழந்தைகள்தான்” என்கிறார்.

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதி நகரான ‘பன்னு’வைச் சேர்ந்த குல்ஜார் கான், பள்ளிக்கூடத்தில் இருந்து தனது குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வரும்போது, ஒரு ஆசிரியர் தனது மாணவர்களை எல்லாம் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்வது போல் இருக்கிறது. அவ்வளவு கூட்டமாக செல்கிறார்கள்.
57 வயதாகும் குல்ஜாரின் மூன்றாவது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தது.
“இந்த உலகத்தையும், இதில் உள்ள மனிதர்களையும் படைத்தது கடவுள்தான். எனவே, குழந்தை பிறப்பு என்கிற இயற்கையான விஷயத்தை நான் ஏன் தடுக்க வேண்டும்?” என்று கேட்கிறார், குல்ஜார்.
தனது குழந்தைகள் அணி அணியாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாட வெளிப் பசங்களைத் தேட வேண்டியதில்லை என்றும் குல்ஜார் பெருமையோடு கூறுகிறார்.
பல தார மணத்துக்கு பாகிஸ்தானில் தடையில்லை என்பதால் சட்டரீதியாக இது பிரச்சினைக்குரிய விஷயம் இல்லை.
குல்ஜாருடன் பிறந்தவர்கள் 15 பேர். அவர்களில் ஒருவரான அண்ணன் மஸ்தான் கான் வாஸிருக்கு 70 வயதாகிறது. இவருக்கு 22 குழந்தைகள் ‘மட்டுமே’. ஆனால் தனது பேரக்குழந்தைகளை தன்னால் எண்ணி முடிக்கமுடியாது என்று புன்னகைக்கிறார், வாஸிர்.
பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த குவெட்டா நகரில் வசிக்கும் ஜான் முகமதுக்கு 38 குழந்தைகள். ஆனால் இவர் இன்னும் நிறைவடையவில்லை. குழந்தைகள் எண்ணிக்கையில் சதம் அடிப்பதுதான் தனது லட்சியம் என்று ‘கூலாக’ கூறுகிறார்.
ஏற்கனவே 3 மனைவிகள் இருக்கும் ஜான் முகமது, நான்காவதாக ஒரு பெண்ணை மணமுடிக்கத் தேடி வருகிறார். ஆனால் பெண்தான் கிடைத்தபாடில்லை. அதற்காக ஜான் முகமது தனது முயற்சியில் மனம் தளரவும் இல்லை.
ஜான் முகமது தனது லட்சியத்துக்கு ஒரு தர்க்கரீதியான விளக்கமும் சொல்கிறார்!
“எங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்கத்தான் எதிரிகள் எங்களைக் கண்டு பயப்படுவார்கள். எனவே, எனது நாட்டு மக்கள் மேலும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
ஜான் முகமது இப்படி ‘உறுதியோடு’ இருந்தாலும், எகிறும் மக்கள்தொகை, பாகிஸ்தானை தடுமாற வைத்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
கடைசியாக 1998-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானின் மக்கள்தொகை 13 கோடி. அது தற்போது 20 கோடியை எட்டியிருக்கும் என்று கருதப்படுகிறது. தற்போதைய கணக்கெடுப்பு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்போது அது உறுதியாகும்.

Related Tags :
Next Story