இந்திய திபெத்திய எல்லைப்படையில் 303 பணிகள்


இந்திய திபெத்திய எல்லைப்படையில் 303 பணிகள்
x
தினத்தந்தி 31 July 2017 1:00 PM IST (Updated: 31 July 2017 12:14 PM IST)
t-max-icont-min-icon

இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் 303 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய திபெத்திய எல்லைக் காவல் படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் கான்ஸ்டபிள் தரத்திலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 303 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டெயிலர், தோட்ட பராமரிப்பாளர், சமையல்காரர், முடிதிருத்துனர், சலவைக்காரர், வாட்டர் கேரியர், சபாய் கர்மாச்சாரி போன்ற பணியிடங்கள் உள்ளன. பெண்களுக்கும் கணிசமான பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தந்த பணிக்கான காலியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:


12-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:


விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றுகளை இணையதளத்தில் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும். விண்ணப்பிக்க கடைசி நாள் 7-9-2017-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர்- நவம்பரில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.itbpolice.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story