ராணுவத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள்


ராணுவத்தில் ஏராளமான வேலை வாய்ப்புகள்
x
தினத்தந்தி 31 July 2017 2:00 PM IST (Updated: 31 July 2017 12:25 PM IST)
t-max-icont-min-icon

ராணுவத்தில் அதிகாரி மற்றும் அலுவலக பணியிடங்கள் உள்ளிட்ட வேலைகளுக்கு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

ராணுவத்தில் மெட்டீரியல் அசிஸ்டன்ட், பார்மசிஸ்ட், லோயர் டிவிஷன் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக தீயணைப்பு வீரர் பணிக்கு 36 இடங்களும், டிரேட்ஸ்மேன் பணிக்கு 94 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

27 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. பட்டப்படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ மெட்டீரியல் மேனேஜ்மென்ட் , என்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர்கள், 10 மற்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், பார்மசி படித்தவர்கள் ஆகியோருக்கு இந்த பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

உடல் உறுதித் திறன் தேர்வு, திறமைத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான சான்றுகள் இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம்
Commandant 21 Field Ammunition Depot, PIN 909721, C/o 56 APO
என்ற முகவரிக்கு அறிவிப்பில் இருந்து 21 நாட்களுக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரங்கள் 14-7-2017-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்ட பட்டதாரிகள் சேர்க்கை:

மற்றொரு அறிவிப்பின்படி சட்டப் பட்டப்படிப்பு படித்தவர்களை ராணுவ பணிகளில் சேர்க்கும் ‘ஜேக் என்ட்ரி ஸ்கீம்’ பயிற்சி சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆண்-பெண் விண்ணப்பதாரர்கள் 14 பேர் சேர்க்கப்படுகிறார்கள். 21 முதல் 27 வயதுக்கு உட்பட்ட ஆண்-பெண் விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் எல்.எல்.பி. சட்ட பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். அத்துடன் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 23-8-2017-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை
www.joinindianarmy.nic.in
என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்.

படைவீரர் பணிகள்:


ராணுவத்தின் சென்னை மண்டல தலைமையகம், அந்தமான் நிகோபார் தீவில் படைவீரர் பணிக்கான ஆட்சேர்க்கை முகாமை நடத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொதுப்பணி, டிரேட்ஸ்மேன், தொழில்நுட்ப பணி போன்ற பிரிவில் படைவீரர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான ஆட்சேர்க்கை முகாம் போர்ட்பிளேர் நேதாஜி மைதானத்தில் நடைபெற உள்ளது. 17½ வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் அடங்கிய பிரிவில் படித்து 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்- இன்ஸ்ட்ருமென்டேசன் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கும், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.

இதற்கான நேர நேர்காணல் 11-9-2017 முதல் 17-9-2017-ந் தேதிவரை நடைபெறுகிறது. விருப்பம் உள்ளவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.

Next Story