1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்


1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள்
x
தினத்தந்தி 31 July 2017 5:00 AM IST (Updated: 31 July 2017 12:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு பள்ளிகளில் 1325 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011 புள்ளி விவரத்தின்படி 80.33 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். இந்திய அளவில் அதிகமான கல்வி அறிவு பெற்ற மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழக கல்வித் துறையில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள், அதிகமானவர்களை கல்வி அறிவைப் பெற தூண்டி உள்ளது.

மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக டி.ஆர்.பி. அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப டி.ஆர்.பி. அமைப்பு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பின்படி 1325 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இவை உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் கலை போன்ற சிறப்பு ஆசிரியர் பணியிடங்களாகும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், அதிகபட்சம் 57 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். 1-7-2017-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது.

கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பு, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு ஆகியவற்றுடன், பணி சார்ந்த கலைப் படிப்புகளிலும் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.எஸ்.சி., எஸ்.சி.எ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை இணையதளம் வழியாக செலுத்தலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 18-8-2017-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 23-9-2017-ந் தேதியாகும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் : http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Next Story