திருவள்ளூரில் த.மா.கா. கண்டன ஆர்ப்பாட்டம்


திருவள்ளூரில் த.மா.கா. கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Aug 2017 3:30 AM IST (Updated: 31 July 2017 11:39 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்ட த.மா.கா. விவசாய அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட த.மா.கா. விவசாய அணி சார்பில், திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘வார்தா’ புயலின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும். மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி வண்டல் மண் எடுக்கும் விவசாயிகளுக்கு தடை இன்றி மண் வழங்க அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் விக்டரி எம்.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். வடக்கு மாவட்ட தலைவர் சேகர், மாவட்ட துணைத்தலைவர்  வேப்பம்பட்டு அன்பழகன், மாநில நிர்வாகிகள் வெங்க
டேசன், ஜெயக்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி உள்பட 300–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

அப்போது மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோ‌ஷமிட்டனர்.

Next Story