மாதவரத்தில் போலீசாருக்கு மருத்துவ முகாம்


மாதவரத்தில் போலீசாருக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 1 Aug 2017 3:45 AM IST (Updated: 1 Aug 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த மாதவரத்தில் போலீசாருக்கு மருத்துவ முகாம் நடந்தது.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த மாதவரம் போலீஸ் நிலையம் அருகே போலீஸ் குடியிருப்பு உள்ளது. இதில் 45–க்கும் மேற்பட்ட போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு நேற்று மருத்துவ முகாம் நடந்தது. 

இந்த முகாமில் 300–க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாதவரம் மண்டல மருத்துவ அதிகாரி வசந்தகுமாரி போலீசாருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டார். மாதவரம் மண்டல அதிகாரி பால்ராஜ் போலீசாருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். 

இந்த முகாமில் மாதவரம் போலீஸ் உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story