பெண் போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு இளம் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பு


பெண் போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு இளம் பெண்கள் ஆர்வமாக பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Aug 2017 4:30 AM IST (Updated: 1 Aug 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று பெண் போலீசுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.

சென்னை,

தமிழகம் முழுவதும் ஆண்-பெண் போலீஸ் வேலைக்கு உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த வியாழக்கிழமை முதல் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. நேற்று பெண் போலீசுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.

எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 530 பேர் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் 439 பேர் மட்டும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு முதலில் உயரம் அளந்து பார்க்கப்பட்டது. பின்னர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் இறுதியாக 377 பேர் வெற்றிபெற்றனர்.

இவர்களுக்கு 2-வது கட்ட உடல் தகுதி தேர்வு ஆகஸ்டு 3-ந் தேதி நடைபெறும். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பெண்கள் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டு ஓடினார்கள்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடியபோது சில பெண்கள் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை உடனே வழங்கப்பட்டது. நேற்றைய தேர்வில் திருநங்கைகள் யாரும் பங்கேற்க வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story