பெரிய மார்க்கெட்டை சீரமைக்க ஆலோசனை: சிவா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


பெரிய மார்க்கெட்டை சீரமைக்க ஆலோசனை: சிவா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 1 Aug 2017 4:15 AM IST (Updated: 1 Aug 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

சிவா எம்.எல்.ஏ. தலைமையில் புதுவை நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டை சீரமைக்க ஆலோசனை கூட்டுக்கூட்டம்.

புதுச்சேரி,

புதுவை நேரு வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் உள்ள பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நகராட்சி அதிகாரிகள் மற்றும் பெரிய மார்க்கெட் வியாபாரிகள் அடங்கிய கூட்டுக்கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையர் கணேசன், நிர்வாக பெறியாளர் சேகர், உதவி பொறியாளர் மலைவாசன், வருவாய் அதிகாரி பாலாஜி, பெரிய மார்க்கெட் நிர்வாகிகள் முருகன், சதாசிவம், சிவகுருநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கடைகளை முறைப்படுத்துவது, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பெரிய மார்க்கெட்டை சீரமைக்கக்கோரி முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.


Next Story